மலையாள சூப்பர் ஹிட் திரைப்படமான ‘திரிஷ்யம்’-ன் இரண்டாம் பாகமான ‘திரிஷ்யம்-2 ’ கடந்த மாதம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை பிற மொழிகளில் ரீமேக் செய்ய உள்ளனர். அதன்படி திரிஷ்யம் 2 தெலுங்கு ரீமேக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அண்மையில் வெளியானது.
‘திரிஷ்யம்’ முதல் பாகத்தை தெலுங்கில் ரீமேக் செய்த அதே குழு, இரண்டாம் பாகத்தின் ரீமேக்கிற்கும் தயாராகிறது. ஜீத்து ஜோசப் இயக்கத்தில், வெங்கடேஷ், மீனா, நதியா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
மலையாளத்தில் திரிஷ்யம் இரண்டாம் பாகத்தில் ஐஜி கதாபாத்திரம் ஒன்று புதிதாக சேர்க்கப்பட்டிருந்தது. அதில் நடிகர் முரளிகோபி நடித்திருந்தார்.
இந்நிலையில், தெலுங்கில் அந்த கதாபாத்திரத்தில் நடிகர் ராணாவை நடிக்க வைக்க படக்குழு முடிவு செய்துள்ளார்களாம். வெங்கடேஷும் ராணாவும் நெருங்கிய உறவினர்கள் என்பதால், இப்படத்தில் நடிக்க ராணா ஒப்புக்கொள்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.