தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழும் தளபதி விஜய் அவர்கள் வம்சி இயக்கத்தில் தமிழில் ‘வாரிசு’, தெலுங்கில் ‘வாரசுடு’ என்ற பெயரில் கடந்த 11ஆம் தேதி பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியான திரைப்படத்தில் நடித்திருந்தார்.
தெலுங்கு இயக்குனர் தில்ராஜ் தயாரிப்பில் தமன் இசையில் வெளியான இப்படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் பல இடங்களில் கலையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக வெற்றி நடை போட்டு வருகிறது.
இந்நிலையில் இப்படத்தில் தமன் இசையில் முதல் பாடலாக இணையத்தில் வெளியாகி தற்போது வரை ரசிகர்களால் ட்ரெண்டிங்கில் இருக்கும் ரஞ்சிதமே பாடல் குறித்த புதிய தகவலை படக்குழு பகிர்ந்துள்ளது. அதன்படி விஜய் மற்றும் மானசி குரலில் வெளியான இப்பாடல் இணையதளத்தில் தற்போது வரை 150 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சூப்பர் ஹிட் கொடுத்து வருவதாக படக்குழு சிறப்பு போஸ்டருடன் தெரிவித்துள்ளது. அது தற்போது ரசிகர்களால் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Pattunu pathiye.. Manasa kalachu.. #Ranjithame crosses 150M+ views now ❤️
📽️ https://t.co/Q56reRe9tc
🎵 https://t.co/gYr0tkVJkD#Thalapathy @actorvijay sir @SVC_official @directorvamshi @iamRashmika @MusicThaman pic.twitter.com/UeJCms0hOr— Sri Venkateswara Creations (@SVC_official) January 20, 2023