தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி படைப்பள்ளி இயக்கத்தில் உருவாகும் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்து வரும் இப்படம் அடுத்த ஆண்டு வரும் பொங்கல் பண்டிகைக்கு தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாக உள்ளது. தமன் இசையில் உருவாகி இருக்கும் இப்படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே பாடல் அண்மையில் தமிழில் வெளியாகி இணையதளத்தில் சூப்பர் ஹிட் அடித்து வரும் நிலையில் தற்போது இப்பாடலை தெலுங்கிலும் படக்குழு வெளியிட்டுள்ளது.
அந்த வகையில், தெலுங்கில் வாராசுடு என வெளியாக இருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான ரஞ்சிதமே பாடலின் தெலுங்கு லிரிக்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களால் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.