தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் தமன் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்துள்ளார். மேலும் பிரபு, சரத்குமார், பிரகாஷ் ராஜ், யோகி பாபு, நடிகர் ஷாம், ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, ஜெயசுதா, குஷ்பூ ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படம் ஜனவரி 12ஆம் தேதி பொங்கல் விருந்தாக வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கு முன்னதாகவே வெளியாக இருப்பதாக ராஷ்மிகா லைவ் வீடியோவில் தெரிவித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டின் கடைசி நாளான நேற்று இவர் இன்ஸ்டாகிராம் லைவ்வில் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது ரசிகர் கேட்ட கேள்விக்கு வாரிசு திரைப்படம் ஜனவரி 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. படம் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.
இவரது வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் டாப் ட்ரெண்டிங்காக இருந்து வருகிறது.
View this post on Instagram