Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மீண்டும் ஜோடி சேரும் ‘விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா’

Rashmika Mandanna and Vijay Devarakonda paired again

தெலுங்கில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான கீதா கோவிந்தம் படம் மூலம் விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா ஜோடி ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டனர்.

இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பால், மீண்டும் ‘டியர் காம்ரேட்’ எனும் படத்திலும் இருவரும் ஜோடியாக நடித்தனர். அப்படம் வெளியான சமயத்தில் இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரவின. இதனால் இருவரும் இணைந்து நடிப்பதை தவிர்த்து வந்தனர்.

இந்நிலையில், அவர்கள் இருவரும், மீண்டும் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்படத்தை பிரபல தெலுங்கு பட இயக்குனர் சுகுமார் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இயக்குனர் சுகுமார் தற்போது அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா எனும் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்திலும் ராஷ்மிகா தான் ஹீரோயினாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.