நடிகை ராஷ்மிகா மந்தனா, தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம் என பல்வேறு மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார். குறிப்பாக தெலுங்கில் குறுகிய காலகட்டத்தில் மகேஷ் பாபு, நாகர்ஜுனா, நானி, விஜய் தேவரகொண்டா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து நம்பர் ஒன் நடிகையாகி விட்டார்.
அந்த வகையில் தற்போது அல்லு அர்ஜூனுடன் புஷ்பா படத்தில் நடித்து வரும் ராஷ்மிகா, அடுத்தபடியாக ஜூனியர் என்டிஆரின் 30ஆவது படத்தையும் கைப்பற்றியுள்ளாராம். அவர் ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக நடிப்பது இதுவே முதன்முறை.
திரிவிக்ரம் இயக்கும் இந்த படத்திற்காக ராஷ்மிகா, பாலிவுட் நடிகைகளான ஆலியாபட், கியாரா அத்வானி ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ராஷ்மிகா ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.
வருகிற மே மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது. 2022 ஆண்டு கோடை விடுமுறையில் இப்படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.