Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

“இது மாதிரியான கதாபாத்திரம் கிடைத்தால் கண்ணை மூடிக்கொண்டு நடிப்பேன்” : ராஷ்மிகா மந்தனா

rashmika-mandhana-latest-news

தென்னிந்திய திரை உலகில் பிரபலம் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. கன்னட படங்கள் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான இவர் தெலுங்கில் விஜய் தேவர் கொண்டவுடன் வெளியான கீதா கோவிந்தம், புஷ்பா உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் தமிழ், தெலுங்கு ரசிகர்களுக்கு பரிச்சயமானார்.

அதன் பிறகு நேஷனல் கிரஷ் ஆக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருக்கும் இவர் கடந்த பொங்கல் பண்டிகைக்கு விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்தில் நடித்து வரவேற்பை பெற்றார். தற்போது ஹிந்தி திரைப்படங்களில் கவனம் செலுத்தி வரும் இவர் சமீபத்திய நேர்காணலில் தான் நடிக்க விரும்பும் கதாபாத்திரங்கள் குறித்து பகிர்ந்து இருக்கும் தகவல் வைரலாகி வருகிறது.

அதில் அவர், ஆச்சாரியா, மாஸ்டர் போன்ற படங்களில் பெரிய ஹீரோக்களுடன் நடிக்க இருந்த வாய்ப்பை இழந்துவிட்டேன் அது மிகவும் வேதனையாக இருந்தது எனக் கூறியிருக்கிறார். மேலும் தனக்கு பீரியாடிக்கல் மற்றும் அப்பாவி பெண்ணாக நடிக்க ஆசை என்றும் இது சம்பந்தமான கதாபாத்திரங்கள் கிடைத்தால் கண்ணை மூடிக்கொண்டு நடிக்க சம்மதிப்பேன் என்று கூறியிருக்கிறார்.

rashmika-mandhana-latest-news
rashmika-mandhana-latest-news