Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பணம் மோசடி செய்த மேனேஜர். ரஷ்மிகா மந்தனா புகார்

rashmika-mandhana-latest-news

தென்னிந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. கன்னட சினிமாவில் அறிமுகமான இவர் தெலுங்கில் வெளியான கீதா கோவிந்தம், புஷ்பா உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் அனைவருக்கும் பரீட்சையமானார்.

அதன் பிறகு தமிழில் சுல்தான், வாரிசு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வரவேற்பை பெற்றிருந்த இவர் தற்போது மீண்டும் தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகில் பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் ராஷ்மிகா மந்தனாவிடம் பண மோசடி செய்திருப்பதாக தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதாவது, நடிகை ராஷ்மிகா மந்தனாவிடம் நீண்ட காலமாக மேனேஜராக பணியாற்றி வந்த நபர் அவரிடமிருந்து சுமார் ரூபாய் 80 லட்சம் அளவிற்கு பணம் மோசடி செய்திருப்பதாகவும் அதனால் அவரை வேலையை விட்டு நீக்கியதாகவும் தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்து வருகிறது.

rashmika-mandhana-latest-news
rashmika-mandhana-latest-news