தென்னிந்திய திரை உலகில் டாப் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் தெலுங்கில் விஜய் தேவர் கொண்டவுடன் இணைந்து நடித்த கீதா கோவிந்தம் திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் பரிச்சயமானார். அதன் பிறகு புஷ்பா திரைப்படத்தில் நடித்து வரவேற்பை பெற்றிருந்த இவர் தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார்.
சமீபத்தில் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்தில் நடித்திருந்த இவர் தற்போது பிற மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும் பல விதமான ஆடைகளில் விளம்பரங்களில் நடித்து வரும் ராஷ்மிகா எப்போதும் சமூக வலைதள பக்கங்களில் தனது போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவிட்டு அனைவரையும் கவர்ந்து வருவார். அந்த வகையில் அவர் லேட்டஸ்ட்டாக எடுத்திருக்கும் விளம்பரத்தின் போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் ட்ரெண்டாகி வருகிறது.
Rashmika Mandanna pic.twitter.com/RNQAeDNwJZ
— ᴀ ᴠ ᴇ ɴ ɢ ᴇ ʀ 🌊 (@actressavenger) June 6, 2023