கன்னட திரையுலகில் அறிமுகமாகி தற்போது தெலுங்கு திரையுலகில் ரசிகர்களை கவர்ந்த வளர்ந்து வரும் நடிகையாக திகழ்ந்து வருகிறார் இளம் நடிகை ராஷ்மிகா மந்தனா.
ஆம் கன்னட மொழியில் வெளியான கிரிக் பார்ட்டி படத்தின் மூலம் கதாநாயகியாக திரையுலகில் அறிமுகமானார் ராஷ்மிகா.
இதனை தொடர்ந்து தெலுங்கு மொழியில் வெளியான கீதா கோவிந்தன் படம் தான் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் உருவாக காரணமாக இருந்தது.
மேலும் ராஷ்மிகா மந்தனா தற்போது கார்த்தி நடித்து வரும் சுல்தான் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் முதன் முறையாக அறிமுகமாக இருக்கிறார்.
தனது சமூக வலைதளங்களில் தன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அவ்வபோது பதிவிட்டு வருவார் நடிகை ராஷ்மிகா.
இந்நிலையில் தற்போது தான் துளி கூட மேக்கப் போடாமல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் ரசிகர்கள் வைரலாக்கபட்டு வருகிறது.