தென்னிந்திய திரை உலகில் பிரபலம் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. தெலுங்கு திரைப்படங்கள் மூலம் அனைவருக்கும் பரிச்சயமான இவர் தமிழில் சுல்தான் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படத்தை தொடர்ந்து இவரது நடிப்பில் வம்சி படைப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடிப்பில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் கடந்த மாதம் நேரடியாக வெளியான வாரிசு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
மேலும் இப்படத்தில் தமன் இசையமைப்பில் இடம்பெற்றிருந்த ரஞ்சிதமே பாடல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஆட்டம் போட வைத்து தற்போது வரை வைப் செய்து வருகிறது. இந்நிலையில் இப்பாடலின் மேக்கிங் வீடியோக்கள் சின்ன சின்னதாக இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்போது இப்பாடலுக்கு நடிகை ராஷ்மிகா டான்ஸ் மாஸ்டருடன் இணைந்து டான்ஸ் பிராக்டிஸ் செய்யும் மேக்கிங் வீடியோ வெளியாகி இருக்கிறது. அது தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram