Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

நான் நல்லவனா கெட்டவனா? – குழம்பி இருக்கும் விஜய் ஆண்டனி

RATHAM First Look

இசையமைப்பாளராக சினிமா பயணத்தை தொடங்கி பிறகு கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய் ஆண்டனி. 2012-இல் வெளியான ’நான்’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமான இவர் பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘கோடியில் ஒருவன்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது அவர் தமிழரசன், அக்னிச் சிறகுகள், காக்கி, பிச்சைக்காரன் 2, மழை பிடிக்காத மனிதன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் சில படங்கள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.

இதனிடையே நடிகர் விஜய் ஆண்டனி பாலாஜி முருகன் இயக்கும் ‘கொலை’ படத்தில் நடித்து வருகிறார். கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விஜய் ஆண்டனி அடுத்ததாக நடிகர் சிவா நடித்து வெளியான தமிழ் படத்தை இயக்கிய இயக்குனர் சி.எஸ்.அமுதன் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இப்படத்தின் டைட்டில் போஸ்டர் நேற்று (23.1.2022) மாலை 4 மணிக்கு வெளியாகும் எனப் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி படத்தின் டைட்டிலை வெளியிட்டனர். அந்த படத்திற்கு ’ரத்தம்’ என பெயரிடப்பட்டுள்ளது. இதனை நடிகர் விஜய் ஆண்டனி அப்படத்தின் இயக்குனர் சி.எஸ்.அமுதனை கிண்டலாக கேள்வி கேட்கும் தொனியில் ”இந்த படத்துல நான் நல்லவனா கெட்டவனா?” என்று அவருடைய வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.