மாஸ்டர் படத்தின் அப்டேட் கேட்டு லோகேஷ் கனகராஜ் உடன் சண்டையிட்டு உள்ளார் இளம் இயக்குனரான ரத்னகுமார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.
மாநகரம், கைதி ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்கியுள்ளார். அவருடன் இணைந்து மேயாதமான், ஆடை ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ரத்னகுமார் திரைக்கதை அமைத்துள்ளார்.
தளபதி விஜய் ரசிகர்கள் இந்த படம் பற்றிய அப்டேட்களுக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். இதனால் படக்குழு தொடர்ந்து எந்தவித அப்டேட்டையும் வெளியிடாமல் அமைதி காத்து வருகிறது.
இதன் காரணமாக தற்போது இயக்குனர் ஏ ரத்தினகுமார் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அப்டேட் என்னாச்சு என மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் சண்டை பிடித்துள்ளார்.
#Master Update Ennachu 🙄 https://t.co/MvJXLDoSBn pic.twitter.com/jw5hJKfpyf
— Rathna kumar (@MrRathna) September 15, 2020