Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வசூலில் தூள் கிளப்பும் ரத்னம்,முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் ரத்னம். தமிழ் தெலுங்கு மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் நல்ல வரவேற்பு வருகிறது.

இயக்குனர் ஹரியின் கூட்டணியில் மூன்றாவது முறையாக விஷால் நடித்துள்ள இந்த படம் ரசிகர்களுக்கு பிடித்தமான ஒன்றாக அமைந்துள்ளது. இந்த நிலையில் திரைப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 3.57 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

மேலும் தமிழகத்தில் மட்டும் 2‌.50 கோடி ரூபாய் வசூல் செய்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இன்று முதல் வார விடுமுறை நாட்கள் என்பதால் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Rathnam movie 1st day collection update
Rathnam movie 1st day collection update