தமிழில் கார்த்தியுடன் காற்று வெளியிடை படத்தில் நடித்து பிரபலமான அதிதிராவ் ஹைதரி செக்க சிவந்த வானம், சைக்கோ படங்களிலும் நடித்து இருக்கிறார். தற்போது தமிழ், தெலுங்கில் தயாராகும் மகா சமுத்திரம் படத்தில் நடித்து வருகிறார்.
அவர் அளித்த பேட்டி வருமாறு: “எந்த மாதிரி சவாலான வேடங்களில் நடிக்கவும் தயாராக இருக்கிறேன். வெள்ளித்திரையில் இப்படித்தான் நடிப்பேன். அந்த மாதிரி நடிக்க மாட்டேன் என்றெல்லாம் எந்த நிபந்தனையும் வைக்க கூடாது. உணர்ச்சிகரமாக நடிக்க வேண்டும் என்றாலும் முத்தக்காட்சியில் நடிக்க வேண்டும் என்றாலும் தயாராக இருக்க வேண்டும்.
தேவையில்லாமல் காட்சிகளை திணிப்பது போல் இருக்க கூடாது. கதையில் அந்த காட்சி தேவையாக இருக்க வேண்டும். அப்படி அவசியமாக இருந்தால் முத்தம் கொடுத்தோ, கவர்ச்சியாகவோ நடிக்க தயாராக இருக்கிறேன்”. இவ்வாறு அதிதிராவ் கூறினார்.