Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஜெயிலர் 2 படம் குறித்து வெளியான சூப்பர் தகவல். எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

reason-behind-on-jailer-2-movie-details

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தின் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் ஜெயிலர்.

இதனைத் தொடர்ந்து தற்போது ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ள ரஜினி பிறகு மீண்டும் நெல்சன் உடன் இணைந்து ஜெயிலர் 2 படத்தில் நடிக்க உள்ளார்.

பொதுவாக இரண்டாம் பாக கதைகளில் நடிக்க ஆர்வம் காட்டாத ரஜினி இந்த படத்தில் நடிப்பதற்கான காரணம் என்ன என்பது தெரியவந்துள்ளது. அதாவது இது ஜெயிலர் படத்தின் தொடர்ச்சியான கதை அல்ல மாறுபட்ட கதை என தெரிய வந்துள்ளது.

மேலும் இந்த படத்தில் நாயகியாக நயன்தாராவும் பாலிவுட் நடிகை ஒருவரும் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

reason-behind-on-jailer-2-movie-details
reason-behind-on-jailer-2-movie-details