Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தொகுப்பாளினி டிடி விஜய் டிவி விட்டு விலகுவதற்கு காரணம் இதுதான்

reason dd left vijay tv latest news update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் பரீட்சையுமானவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. விஜய் டிவியில் தொகுத்து வழங்காத நிகழ்ச்சியே கிடையாது என்று சொல்லும் அளவிற்கு மிகவும் பாப்புலரான தொகுப்பாளினியாக வலம் வந்தார்.

ஒரு கட்டத்தில் இவர் விஜய் டிவியில் இருந்து வெளியேறிய நிலையில் தற்போது அதற்கான காரணம் என்ன என்பது குறித்து பேசி உள்ளார். தொகுப்பாளராக வேலை செய்பவர்கள் ஷூட்டிங் என்பது பல மணி நேரம் நின்று கொண்டே தான் இருப்பார்கள்.

எனக்கும் அப்படித்தான் அதனால் ஒரு கட்டத்தில் நீண்ட நேரம் நிற்க முடியாத வகையில் நோய் ஒன்று தாக்கியதாகவும் அதனால் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் இருந்து விலகிக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். எனக்கு மட்டுமல்ல எல்லா தொகுப்பாளர்களுக்கும் இதே நிலைதான் என தெரிவித்துள்ளார்.

இருந்த போதிலும் தனுஷ் போன்ற மிகப்பெரிய நடிகர்களின் இசை வெளியீட்டு விழாக்களை தொகுத்து வழங்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அந்த இசை வெளியீட்டு விழாவில் நான் நின்று கொண்டிருப்பது போல தான் இருக்கும், ஆனால் நான் உட்காருவதற்கு சேர் ஏற்பாடு செய்திருந்தார்கள் என தெரிவிக்கின்றார்.

reason dd left vijay tv latest news update
reason dd left vijay tv latest news update