ஜி.வி.பிரகாஷ் குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் ரெபல் படத்தின் 2-வது சிங்கிள் இன்று வெளியாகியுள்ளது.
ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் நிகேஷ் ஆர்.எஸ் இயக்குகிறார்.
இந்த படத்தில், மமிதா பைஜூ, கருணாஸ், சுப்பிரமணிய சிவா, ஷாலு ரஹீம், வெங்கடேஷ் வி.பி, ஆதித்யா பாஸ்கர், கல்லூரி வினோத், ஆதிரா உள்ளிட்ட பலர் நடித்திருகின்றனர்.
ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். உண்மை சம்பவங்களை தழுவி எடுத்துள்ள இந்த படத்தின் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ரெபல் படத்தின் டீசர் மற்றும் முதல் சிங்கிள் வெளியான நிலையில், இன்று படத்தின் 2-வது சிங்கிளான “தி ரைஸ் ஆப் ரெபல்” வெளியிடப்பட்டுள்ளது.
பத்தி எரியுர நெருப்பிவன் பாருடா
The second single #RiseOfRebel from Rebel Is Out Now!
Music: @gvprakash | #Ofro
Singers: @Arunrajakamaraj | @ofrooooo
Lyrics: #ArunrajaKamaraj#RebelFromMarch22#StudioGreen @GnanavelrajaKe @NikeshRs @MamithaBaiju_…— G.V.Prakash Kumar (@gvprakash) February 16, 2024