தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக விளங்கி வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக வாரிசு என்ற திரைப்படம் உங்களுக்கு வெளியாக உள்ளது.
தெலுங்கு இயக்குனர் வம்சி பைடப்பள்ளி இயக்கும் இந்த படத்தை ராஜு தயாரிக்க தமன் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தில் இருந்து மூன்று போஸ்டர்கள் வெளியான நிலையில் படத்தின் முதல் சிங்கிள் ட்ராக் நேற்று மாலை ஐந்து முப்பது மணிக்கு வெளியானது.
பாடல் மாஸ் பிரியாணி பாடல் மற்றும் தமிழ் பாடல் ஒன்றின் காப்பி என கிண்டல் அடிக்கப்பட்டு வந்தாலும் ஒரு மணி நேரத்தில் இந்த பாடல் 2.5 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.
தற்போது வரை 12 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் இந்த பாடலை பார்த்து ரசித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.