தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பூவே உனக்காக என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் ரேஷ்மா. இதைத்தொடர்ந்து அபி டெய்லர் சீரியல் நடித்த இவர் அடுத்ததாக விஜய் டிவியில் ஒளிபரப்பான கிழக்கு வாசல் தொடரில் நாயகியாக நடித்தார்.
ஆனால் இந்த சீரியல் தொடங்கிய வேகத்தில் முடிவுக்கு வந்துவிட்டது. இதையடுத்து ரேஷ்மா தற்போது புதிய சீரியலில் ஒப்பந்தமாகியுள்ளார்.
ஆமாம் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள புத்தம் புதிய சீரியல் ஒன்றில் ரேஷ்மா நாயகியாக நடிக்க உள்ளார். இந்த சீரியலில் ஹீரோவாக ஜெய் ஆகாஷ் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ரேஷ்மா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
விரைவில் இந்த சீரியல் குறித்து அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
