கோபியுடன் கல்யாணத்துக்கு முகூர்த்த புடவை ஷாப்பிங் செய்துள்ளார் பாக்கியலட்சுமி ரேஷ்மா.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இத சீரியலில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ரேஷ்மா பசுப்பட்டி. வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் தொகுப்பாளர், செய்தி வாசிப்பாளர் என பல துறைகளில் பணியாற்றியுள்ளார்.
தற்போது இவர் சென்னை டிநகரில் உள்ள வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் ஷாப்பிங் செய்துள்ளார். ஏழு அடுக்கு தலத்துடன் மிக பிரம்மாண்டமாக செயல்பட்டு வரும் இந்த கடைசியில் ஆஃபரில் விற்பனை தூள் கிளப்பி வருகிறது.
ஏற்கனவே பல பிரபலங்கள் இந்த கடையில் ஷாப்பிங் செய்துள்ளனர். இந்த நிலையில் தற்போது ரேஷ்மா ஷாப்பிங் செய்துள்ளார். குறைந்த விலையில் நிறைந்த தரத்துடனான புடவைகளை கண்டு வியந்துள்ளார். மேலும் சில புடவையை பார்த்து கோபி எனக்கு வாங்கி கொடுத்து திரும்பவும் வாங்கிகிட்ட புடவைக்கு பதிலா இப்படி எடுத்து கொடுத்திருக்கலாம் என பேசியுள்ளார்.
மேலும் முகூர்த்த புடவைகளை சிலவற்றை பார்க்க ரசிகர்கள் என்ன கோபியுடன் கல்யாணத்துக்கு புடவையா என கிண்டல் அடித்து வருகின்றனர்.
சிறியவர்கள் வரை பெரியவர்கள் வரை அனைவரும் ஆடைகளை பார்த்து எனக்கு இப்போ ஒரு பெண் குழந்தை ரொம்ப நல்லா இருக்குமேனு ஆசையா இருக்கு. அந்த அளவுக்கு டிரஸ் எல்லாம் ரொம்ப அழகா இருக்கு என கூறுகிறார்.
அதோடு இல்லாமல் பொம்மைகள் பிறகு எடை கணக்கில் விற்பனை செய்யப்படும் கிச்சன் பாத்திரங்களை கண்டு ஆச்சரியப்பட்டுள்ளார். இவருடைய ஷாப்பிங் வீடியோ சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
