பாடகர், இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் ஹிப்ஹாப் ஆதி. இவர் ஆம்பள, தனி ஒருவன், அரண்மனை 2, கதகளி, கத்தி சண்டை, இமைக்கா நொடிகள், கோமாளி, ஆக்ஷன் உள்பட பல படங்களுக்கு இசைமைத்துள்ளார். மீசையை முறுக்கு என்ற படத்தை இயக்கி, கதாநாயகனாகவும் அறிமுகமானார். தொடர்ந்து நட்பே துணை, நான் சிரித்தால், அன்பறிவு ஆகிய படங்களிலும் கதாநாயகனாக நடித்தார். இந்த படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.
இந்நிலையில், ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. மரகத நாணயம் படத்தை இயக்கிய ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கும் படத்தில் ஆதி நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு வீரன் என்று பெயரிடப்பட்டுள்ளது. ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளியான சிவகுமாரின் சபதம், அன்பறிவு ஆகிய படங்களை தயாரித்த ‘சத்யஜோதி பிலிம்ஸ்’ டி.ஜி.தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரிக்க இணை தயாரிப்பை ஜி.சரவணன் மற்றும் சாய் சித்தார்த் செய்துள்ளனர்.
மேலும் முனிஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் ஆகியோர் இணைந்து நடிக்கிறார்கள். இப்படத்தின் ஒளிப்பதிவை தீபக் டி மேனன் மேற்கொள்ள, படத்தொகுப்பை ஜி.கே.பிரசன்னா கவனிக்க ஹிப்ஹாப் ஆதி இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று எளிமையான முறையில் பொள்ளாச்சியில் பூஜையுடன் தொடங்கி உள்ளது. இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.
Happy to announce my next film with @SathyaJyothi , directed by Maragadha Naanayam fame @ArkSaravan_Dir titled #VEERAN⚡A lot of effort has been put into the pre-production & we are working hard to deliver an out and out entertainer. Need all your support & blessings 🤟🏻 pic.twitter.com/puALPdiUzs
— Hiphop Tamizha (@hiphoptamizha) May 25, 2022