Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மீண்டும் இணைந்த ‘பியார் பிரேமா காதல்’ கூட்டணி

Reunited ‘Pyaar Prema Kaadhal’ alliance

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் 2018-ம் ஆண்டு வெளியான படம் ‘பியார் பிரேமா காதல்’. காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்த இத்திரைப்படத்தில் பிக்பாஸ் பிரபலங்களான ஹரிஷ் கல்யாண், ரைசா நடித்திருந்தனர்.

அறிமுக இயக்குனர் இளன் இயக்கியிருந்தார். யுவன் இசையில் படத்தின் பாடல்கள் ஒருபுறம் ஹிட்டாக, படமும் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றதோடு வசூலையும் குவித்தது.

இந்நிலையில் ஹரிஷ் கல்யாண் – இளன் – யுவன் வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இந்தக் கூட்டணி இணையும் படத்தின் பர்ஸ்ட் லுக் விரைவில் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் நடிக்கும் இதர நடிகர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளதாகவும், மும்பை, சென்னை, ஊட்டி உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தவும் படக்குழு திட்டமிட்டுள்ளார்களாம்.