Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன தனுஷ், சிம்பு பட நடிகை… வைரலாகும் புகைப்படம்

Richa Gangopadhyay New sills

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘மயக்கம் என்ன’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் ரிச்சா கங்கோபாத்யாய். இப்படத்தை தொடர்ந்து சிம்புவுடன் இவர் நடித்த ‘ஒஸ்தி’ படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது.

சினிமாவில் பிரபலமாக இருக்கும் போதே ஜியோ என்பவரை திருமணம் செய்துகொண்டார் அவர். தற்போது வெளிநாட்டில் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் இவர் தன்னுடைய சமூகவலைதள பக்கத்தில் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அதில் அடுத்த மாதம் குழந்தை பிறந்துவிடும் என்று பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்க்கும் பலரும் ரிச்சா மிகவும் உடல் எடை கூடி அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிட்டதாக கருத்து வெளியிட்டு வருகின்றனர்.