தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் நாளுக்கு நாள் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
சீரியலில் கோபி பாக்கியா கதை ஒரு பக்கம் செல்ல மறுப்பக்கம் எழில் அமிர்தா கதை சென்று கொண்டிருக்கிறது. எழில் அமிர்தா கல்யாணம் நடக்குமா நடக்காதா என பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் அதிலிருந்து விலகி உள்ளார் ரித்விகா.
சமீபத்தில் தான் இவருக்கு திருமணம் நடந்து முடிந்தது. திருமணத்திற்கு பிறகு நடிக்க வேண்டாம் என முடிவு செய்து ரித்விகா வெளியேறியதாக சொல்லப்படுகிறது. உண்மை என்ன என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

rithika-evicts-from-baakiyalakshmi serial