Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சாக்ஷி மாலிக்கிற்கு ஆதரவாக பேசிய ரித்திகா சிங்

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் தேர்தல் சமீபத்தில் நடந்தது. இதில் முன்னாள் தலைவரின் உறவினரான சஞ்சய் சிங் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

இதற்கிடையே, டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக், புதிய தலைவராக ஒரு பெண் தான் வரவேண்டும் என கோரிக்கை வைத்திருந்தோம். ஆனால், தலைவர் பதவிக்கான போட்டியாளர்கள் பட்டியலில் ஒரு பெண்கூட இல்லை. பிரிஜ் பூஷனின் உறவினரை தான் தலைவராக தேர்ந்தெடுத்து உள்ளனர். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே நான் மல்யுத்தத்தில் இருந்து விலகுகிறேன் என தெரிவித்தார்.

இந்நிலையில், நடிகை ரித்திகா சிங் தனது எதிர்ப்பை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
அதில், வீராங்கனை சாக்ஷி மாலிக்கை இப்படி பார்க்கும்போது இதயம் உடைகிறது. ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு பெருமை பெற்றுத் தந்த சாக்ஷி மாலிக் இவ்வளவு ஆண்டுகள் கடின உழைப்பினை, கனவுகளை நம்பிக்கைகளை கைவிட்டு ‘நான் விலகுகிறேன்’ என கூறுவது பேரழிவானது. தற்போதும், போராட்டத்தின் போதும் சாக்ஷி மாலிக் எதிர்கொண்ட அவமரியாதை கொடுமையானது என பதிவிட்டுள்ளார்.

நடிகை ரித்திகா சிங் ‘இறுதிச்சுற்று’ திரைப்படத்தில் மல்யுத்த வீராங்கனையாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Rithika Singh about Sakshi Malik
Rithika Singh about Sakshi Malik