Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

படப்பிடிப்பு தளத்தில் ரித்திகா சிங்குக்கு ஏற்பட்ட காயம்.. ஆறுதல் தெரிவிக்கும் ரசிகர்கள்

கடந்த 2016-ஆம் ஆண்டு சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த ‘இறுதிச்சுற்று’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் ரித்திகா சிங். இயல்பிலேயே கிக் பாக்சிங் விளையாட்டு வீராங்கனையான ரித்திகா, அந்த படத்தில் அதே வேடம் என்பதால் கனகச்சிதமாக பொருந்தினார். இறுதிச்சுற்று படத்தில் நடித்ததற்காக அவருக்கு தேசிய விருதும் வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அசோக் செல்வன் – ரித்திகா நடிப்பில் வெளியான ‘ஓ மை கடவுளே’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் இவரது கதாபாத்திரம் பலரால் பாராட்டப்பட்டது. மேலும், இவர் ‘ஷிவலிங்கா’, ‘குரு’, ‘கொலை’ போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது ரஜினியின் 170-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகை ரித்திகா சிங்கிற்கு இந்த படத்தின் படப்பிடிப்பின் கையில் காயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள ரித்திகா சிங், “ஓநாய் மனிதனுடன் சண்டை போட்டது போலாகி விட்டது. படப்பிடிப்பின்போது கண்ணாடி இருக்கிறது என்று அனைவருமே எச்சரித்த போதிலும், நிலைதடுமாறி அதில் விழுந்து காயமடைந்துவிட்டேன்.

கண்ணாடி துகள்கள் ஆழமாக இறங்கிவிட்டன. சிகிச்சை பெற்று முழுமையாக உடல்நலம் பெற்ற பின்னர் படப்பிடிப்பில் பங்கேற்பேன்” என்று குறிப்பிட்டுள்ளார். ரித்திகா சிங் வேகமாக குணமடைய வேண்டும் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Rithika Singh shooting spot update
Rithika Singh shooting spot update