சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்து வெளிவந்த இறுதி சுற்று படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ரித்திகா சிங்.
இதன்பின் விஜய் சேதுபதியுடன் ஆண்டவன் கட்டளை, ராகவா லாரன்ஸின் சிவா லிங்கா ஆகிய படங்களில் நடித்து வந்தார்.
மற்றும் சமீபத்தில் அசோக் செல்வன், விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த ஓ மை கடவுளே எனும் படத்திலும் நடித்து பிரபலமானார் ரித்திகா.
சமூக வலைதளங்களில் கூட மிகவும் ஆட்டிவாக இருந்து வரும் நடிகை ரித்திகா அவ்வப்போது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில் தற்போது பிரபல நடிகர் விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2 படத்தின் கதாநாயகியாக கமிட்டாகி வுள்ளராம்.
மேலும் சமீபத்தில் தனது பிறந்தநாள் அன்று தான் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார் விஜய் ஆண்டனி.