தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் சந்தியாவாக ஆலியா மானசா நடித்து வந்த நிலையில் அவர் வெளியேறினார்.
இதையடுத்து சந்தியாவாக ரியா விஸ்வநாத் நடிக்க தொடங்கினார். இவர் சந்தியாவாக நடிக்க தொடங்கி ஒரு வருடம் ஆகும் நிலையில் தற்போது இந்த சீரியலில் இருந்து விலகி விட்டதாக வீடியோ ஒன்றின் மூலம் அறிவித்துள்ளார்.
மேலும் விரைவில் புதிய சந்தியா வரப்போகிறார் அவருக்கு தொடர்ந்து ஆதரவு கொடுங்கள் என கேட்டுக்கொண்டதோடு இதுவரை தனக்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றியை கூறியுள்ளார்.