Tamilstar
News Tamil News

சாலைக்கு சுஷாந்த் சிங் பெயர்சூட்டி அன்பை வெளிப்படுத்திய சொந்த ஊர் மக்கள்

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14-ந் தேதி திடீரென தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் ஒட்டுமொத்த இந்திய திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வாரிசு நடிகர்கள் கொடுத்த மன அழுத்தத்தினால் நடந்துள்ளது என்று சர்ச்சைகள் எழுந்துள்ளன. தற்கொலைக்கான உண்மை காரணத்தை அறிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பீகாரில் அமைந்துள்ள சுஷாந்தின் சொந்த ஊரான புர்னியாவில் இருக்கும் ஒரு சாலைக்கு சுஷாந்த் சிங்கின் பெயர் சூட்டப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மதுபானி முதல் மட்டா சவுக் வரை இருக்கும் சாலைக்கு சுஷாந்த் சிங் ராஜ்புட் சாலை என பெயரிடப்பட்டுள்ளது.

மேலும் அங்கு அமைந்துள்ள போர்டு நிறுவனத்தின் ரவுண்டானாவிற்கு சுஷாந்த் சிங் ராஜ்புட் ரவுண்டானா என பெயர் மாற்றப்பட்டு உள்ளது.

சமீபத்தில் பெயர் மாற்றப்பட்ட சாலையை திறந்து வைத்துள்ளனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.