தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கோலாகலமாக தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
நிகழ்ச்சி தொடங்கிய ஏழு வாரங்கள் முடிவடைந்துள்ள நிலையில் இன்று பிக் பாஸ் வீட்டிலிருந்து ராபர்ட் மாஸ்டர் வெளியேற்றப்பட்டுள்ளார். ரக்ஷிதாவின் பின்னாடியே திரிந்து கொண்டதை இவரது வெளியேற்றத்துக்கு காரணமாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் ஏழு வாரங்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்த ராபர்ட் மாஸ்டர் ஒரு வாரத்திற்கு கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் ரூபாய் சம்பளம் வாங்க ஏழு வாரத்திற்கு 10.5 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
