Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கமல்ஹாசனை நேரில் சந்தித்து ஆசிபெற்ற ரோபோ ஷங்கர்.வைரலாகும் வீடியோ

தனியார் தொலைக்காட்சி காமெடி நிகழ்ச்சிகளில் மிமிக்ரி ஆர்டிஸ்டாக பயணத்தை தொடங்கியவர் ரோபோ சங்கர். அதன்பின்னர் தமிழ் திரையுலகில் தீபாவளி, வாயை மூடி பேசவும், மாரி, புலி, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், வேலைக்காரன், ஹீரோ, உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை நடிகராக வலம் வந்து ரசிகர்களை கவர்ந்தார். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பாராட்டுக்களை பெற்றார்.

சமீபத்தில் மஞ்சள் காமாலையினால் ரோபோ சங்கர் மிகவும் மெலிந்து காணப்பட்டார். இவரை பார்த்த ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சியடைந்தனர். தற்போது இவர் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியுள்ளார். அதுமட்டுமல்லாமல் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகர் ரோபோ சங்கர் தன் குடும்பத்துடன் நடிகர் கமல்ஹாசனை சந்தித்து ஆசிப்பெற்றுள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ரோபோ சங்கருக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்த போது கமல்ஹாசன் தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு அறிவுரை கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.