தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான காமெடி நிகழ்ச்சிகளின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ரோபோ சங்கர். தற்போது வெள்ளித்திரையில் பல நடிகர்களுடன் இணைந்து பல்வேறு படங்களில் நடித்து வரும் இவர் சமீபத்தில் உடல் மிகுந்து ஒல்லியாக காணப்படும் போட்டோக்கள் இணையத்தில் வெளியாகின.
ரோபோ சங்கரை எப்பவும் குண்டாகவே பார்த்த ரசிகர்கள் இப்படி பார்த்ததும் அதிர்ச்சி அடைந்து அவருக்கு உடல் நலக் குறைபாடு என கேள்வி எழுப்பி வந்தனர். ஆனால் அவரது மனைவி பிரியங்கா படத்திற்காக அவர் உடல் எடையை குறைத்து இருப்பதாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் ரோபோ சங்கரின் நண்பரும் நடிகருமான போஸ் வெங்கட் நடித்த ரோபோ சங்கருக்கு உடல்நிலை குறைபாடு ஏற்பட்டது உண்மைதான் என தெரிவித்துள்ளார். எல்லோருக்கும் உடல் நலக் குறைபாடு ஏற்படுவது போல் தான் அவருக்கு ஏற்பட்டது விரைவில் அவர் பழைய நிலைக்கு திரும்புவார் என தெரிவித்துள்ளார்.
போஸ் வெங்கட் அளித்த பேட்டியை கேட்ட ரசிகர்கள் ரோபோ சங்கருக்கு என்னாச்சு என கவலை அடைந்துள்ளனர்.