Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ரகுவரன் குறித்து உருக்கமான பதிவை வெளியிட்ட நடிகை ரோகினி.

rohini-emotional-post-about-actor-raghuvaran

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத மாபெரும் முன்னணி நட்சத்திரமாக வளம் வந்தவர் நடிகர் ரகுவரன். தற்போது வரை பாட்ஷா திரைப்படத்தில் இவர் நடித்த மார்க் ஆண்டனி கதாப்பாத்திரம் ரசிகர்களின் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளது என்றே சொல்லலாம்.

தனது எதார்த்தமான நடிப்பால் பல படங்களில் நடித்து ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்திருந்த இவர் நடிகர் தனுஷின் யாரடி நீ மோகினி என்னும் திரைப்படத்தில் கடைசியாக நடித்திருந்தார். கடந்த மார்ச் 19ஆம் தேதி 2008 ஆம் ஆண்டில் காலமான இவரை நினைவு கூர்ந்து தற்போது அவரது முன்னாள் மனைவியும் பிரபல முன்னணி நடிகையுமான ரோகினி தனது சமூக வலைதள பக்கத்தில் உருக்கமான பதிவினை பகிர்ந்திருக்கிறார்.

அதில் அவர், “ரகுவரன் இருந்திருந்தால் தற்போதைய சினிமாவை நிச்சயம் விரும்பியிருப்பார். மேலும் ஒரு நடிகராகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பார் என்று உருக்கமாக தெரிவித்திருக்கிறார்”. இவரின் இந்த பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.