Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மாஸ்டர் எப்போது ரிலீஸ்? பிரபல தியேட்டர் உரிமையாளரின் அதிரடி பதிவு – உச்சகட்ட கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்.!!

 தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் அடுத்ததாக ரிலீசாக உள்ளது.

இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, சேத்தன், ஸ்ரீமன், ஸ்ரீநாத், தீனா என பலர் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த கொரானா தொற்று காரணமாக தொடர்ந்து தள்ளிப் போய் வரும் இப்படம் எப்போது ரிலீசாகும் என ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இப்படியான நிலையில் பிரபல தியேட்டர் உரிமையாளரான ( ரோகிணி தியேட்டர் ) ரேவ்நாத் சரண் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மாஸ்டர் ரிலீஸ் குறித்து பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவே அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் மாஸ்டர் பொங்கல் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் விஜய் ரசிகர்கள் அனைவரும் உற்சாகமடைந்துள்ளனர்.

ரேவ்நாத் சரணின் இந்த பதிவு குறித்து ரசிகர்கள் கமெண்ட்ஸ்