தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிரபலமான சீரியல் ரோஜா. மதிய வேளையில் ஒளிபரப்பாக தொடங்கிய இந்த சீரியல் மக்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பு காரணமாக இரவு 9 மணிக்கு மாற்றப்பட்டது.
பல வருடங்களாக வெற்றிகரமாக ஓடிய இந்த சீரியலில் ரோஜா என்ற கதாபாத்திரத்தில் சீரியல் நாயகியாக பிரியங்கா நல்காரி நடித்தார். ரோஜா சீரியல் முடிவுக்கு வந்ததும் தற்போது இவர் புதிய சீரியலில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார்.
ஆனால் இவரது புதிய சீரியல் சன் டிவியில் இல்லை. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாக உள்ள சீதாராமன் என்ற சீரியலில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். விரைவில் இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.