Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

‘ஊ சொல்றியா மாமா..’ சூப்பராக ஆடிய ரோஜா பிரியங்கா நல்காரி! வீடியோ இதோ

Roja Serial Actress Priyanka Nalkari Dance Video

ரோஜா சீரியலில் ஹீரோயினாக நடித்து வருபவர் பிரியங்கா நல்காரி. ஆந்திராவை சேர்ந்த அவருக்கு தமிழ் சின்னத்திரையில் அதிகம் அளவு ரசிகர்கள் இருக்கிறார்கள்.

எப்போதும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வரும் பிரியங்கா நல்காரி அவரது போட்டோக்களை தொடர்ந்து வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.

இந்நிலையில் பிரியங்கா நல்காரி புஷ்பா படத்தின் ‘ஊ சொல்றியா.. ஊஊ சொல்றியா’ பாடலுக்கு நடனம் ஆடி வீடியோ வெளியிட்டு இருக்கிறார். நடிகை ஆர்த்தி சுபாஷ் உடன் சேர்ந்து தான் அவர் டான்ஸ் ஆடி இருக்கிறார்.

டான்ஸ் சூப்பர் என ஒரு தரப்பும், ஆண்களை இப்படி பேசுவது தவறு என சொல்லி மற்றொரு தரப்பும் கமெண்டில் கூறி வருகின்ற னர். வீடியோ இதோ..