சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் மக்களின் பேவரட் சீரியலாக முன்னிலையில் இருக்கும் சீரியல்தான் ரோஜா. இதில் ரோஜா மற்றும் அர்ஜுன் கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரியங்கா மற்றும் சிபு சூரியனுக்கு தனிப்பட்ட முறையில் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். அதிலும் அர்ஜுன் ரோலில் நடிக்கும் சிபு சூரியனுக்கு பெண் ரசிகைகள் ஏராளம்.
இந்த ரோஜா சீரியல் சன் டிவியில் இரண்டு முறை விருதுகளையும் பெற்றுள்ளது. இந்நிலையில் சிபு சூரியனுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்று கடந்த மாதம் அழகான ஆண் குழந்தையும் பிறந்துள்ளது. இதுவரை மகனின் புகைப்படத்தை வெளியிடாமல் இருந்த சுபுசூரியன் தற்பொழுது முதல்முறையாக தனது மகனின் கையைப் பிடித்துக் கொண்டு இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.
அத்துடன் இணைத்து நாம் ஒன்றாக இணைந்தால் எல்லாம் சிறப்பாக இருக்கும்.தந்தைக்கும் மகனுக்கும் இடையில் மேஜிக்கல் பாண்ட்” என்ற கேப்ஷனையும் சிபு சூர்யன் பதிவு செய்துள்ளார். அதனைப் பார்த்த ரசிகர்கள் அப்புகைப்படத்திற்கு லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.
View this post on Instagram