Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஆஸ்கார் மேடையில் ஒளிபரப்பப்பட்ட நாட்டு நாட்டு பாடல். பாராட்டிய விழா விருந்தினர்கள்.

rrr-nattu-nattu-song-perfomance-at-oscar award

ராஜமௌலி இயக்கத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘ஆர்.ஆர்.ஆர்’. இப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் ‘ஆர்ஆர்ஆர்’. இப்படம் உலகம் முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் 25-ஆம் தேதி வெளியானது.

தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்று வசூல் சாதனையும் நிகழ்த்தியது. ஆர்.ஆர்.ஆர் இப்படத்தில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான், ஆலியா பட், பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பீம் கதாபாத்திரத்தில் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம ராஜு கதாபாத்திரத்தில் ராம் சரணும் நடித்திருந்தனர். இப்படம் அண்மையில் கோல்டன் குளோப் விருதை வென்றது.

ஆர்.ஆர்.ஆர் இதையடுத்து ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் நாட்டு நாட்டு தெலுங்கு பாடலை பாடிய ராகுல் சிப்லிகுன்ச் மற்றும் கால பைரவா இருவரும் இந்த பாடலை பாடவுள்ளதாக சமீபத்தில் ஆஸ்கர் அகடமி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இந்நிலையில், இன்று 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆஸ்கர் மேடை இதில், நடிகை தீபிகா படுகோனே ‘நாட்டு நாட்டு’ பாடல் அறிவிப்பை மேடையில் அறிவித்ததையடுத்து ஆஸ்கர் மேடையில் பாடல் ஒலிப்பரப்பட்டு நடனக்குழுவினர் நடனம் ஆடினர். இந்த நடனத்திற்கு ஆஸ்கர் விழா விருந்தினர்கள் எழுந்து நின்று பாராட்டுகளை தெரிவித்தனர். மேலும், ‘நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

rrr-nattu-nattu-song-perfomance-at-oscar award

rrr-nattu-nattu-song-perfomance-at-oscar award