Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அடுத்தடுத்து 4 படங்கள்…. ரூ.1000 கோடி பட்ஜெட் – பிரம்மிப்பூட்டும் பிரபாஸ்

Rs.1000 crore budget - stunning Prabhas

‘பாகுபலி’ திரைப்படங்கள் மூலம் தேசிய அளவில் கவனம் பெற்றவர் பிரபாஸ். இப்படத்தை தொடர்ந்து ‘சாஹோ’வில் நடித்தார். மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவான ‘சாஹோ’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் வசூலை வாரிக்குவித்தது. இதையடுத்து அவருக்கு பிரம்மாண்ட பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

அந்தவகையில் பிரபாஸின் 20-வது படத்தை, ‘சாஹோ’ படத்தை தயாரித்த யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கே கே ராதா கிருஷ்ணா இயக்கும் இப்படத்திற்கு ‘ராதே ஷ்யாம்’ என பெயரிட்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து பிரபாஸின் 21-வது படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகி தேசிய விருது வென்ற ‘மகாநடி’ என்ற படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இப்படத்தை இயக்க உள்ளார். இதில் பிரபாசுக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கிறார்.

பிரபாஸின் 22-வது படம் ஆதிபுருஷ். ராமாயண கதையை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தை ஓம் ராவத் இயக்குகிறார். இதையடுத்து பிரபாஸின் 23-வது படத்தை கே.ஜி.எப். இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்குகிறார். இப்படத்திற்கு ‘சலார்’ என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த நான்கு படங்களின் பட்ஜெட்டை சேர்த்தால் சுமார் ரூ.1,000 கோடியைத் தாண்டுகிறது. இதற்கு முன்னர் இந்தியத் திரையுலகில் ஒரே சமயத்தில் ரூ.1,000 கோடி முதலீடு செய்யப்பட்ட நடிகர் வேறு யாருமில்லை என்று கூறப்படுகிறது.