தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீனா. கடந்த 2009 ஆம் ஆண்டு வித்தியாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு நைனிகா என்ற ஒரு மகள் உள்ளார்.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் நடிகை மீனாவின் கணவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தார். மேலும் இவர் அதற்கு மரணத்திற்கு புறாவின் எச்ச காற்றில் கலந்ததை சுவாசித்தது தான் காரணம் என சொல்லப்பட்டு வருகிறது.
இப்படியான நிலையில் நடிகை மீனா கணவர் இறந்த ஒரு வாரத்திலேயே படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருவதாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று பரவி வருகிறது. ஆனால் உண்மையில் இது கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்ட வீடியோ.
இது தெரியாமல் நெட்டிசன்கள் பலர் ஒரே வாரத்தில் மீனா படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார் என சமூக வலைதளங்களில் தவறான கருத்துக்களை பரப்பி வருகின்றனர்.