Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

இயக்குனர் ஷங்கர் இரண்டாவது மகளுக்கு திருமணமா.? இணையத்தில் வைரலாகும் தகவல்

Rumours on Actress Aditi Shankar Marriage

இந்திய திரை உலகின் பிரமாண்ட இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் சங்கர். இவரது மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு திருமணம் முடிந்த நிலையில் இரண்டாவது மகள் அதிதி ஷங்கர் டாக்டர் பட்டம் முடித்து விட்டு நடிகர் கார்த்திக்கு ஜோடியாக விருமன் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாக உள்ளார்.

ஒரே ஒரு படத்தில் நடித்துள்ளார் அதிதி ஷங்கர். அந்த படம் இன்னும் ரிலீஸ் ஆகாத நிலையில் அதிதிக்கு திருமணம் செய்ய ஷங்கர் முடிவெடுத்திருப்பதாகவும் அதற்காக பிரபலங்களுக்கு பத்திரிகை கொடுக்கும் வேலையில் அவர் ஈடுபட்டு வருவதாகவும் சில புகைப்படங்கள் பரவி வருகின்றன. அதாவது தயாரிப்பாளர் குஞ்சுமோனை நேரில் சந்தித்து பத்திரிக்கை கொடுத்த புகைப்படங்கள் வைரலாகின.

ஆனால் உண்மையில் திருமணம் அதிதி சங்கருக்கு இல்லை. கடந்த வருடம் ஷங்கரின் மூத்த மகளுக்கு திருமணம் முடிந்த நிலையில் தற்போது திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்த இருப்பதாகவும் அதற்காக தான் பத்திரிக்கை கொடுக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Rumours on Actress Aditi Shankar Marriage
Rumours on Actress Aditi Shankar Marriage