தமிழ் சினிமாவில் விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வரும் திரைப்படம் கோப்ரா. மிகப்பெரிய பட்ஜெட்டில் வெளியான இந்த படம் வசூலில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளதால் தயாரிப்பாளருக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
இதனால் தயாரிப்பாளர் அஜய் ஞானமுத்து மீது நடவடிக்கை எடுக்க தயாரிப்பாளர் சங்கத்தில் முறையிட்டு வருவதாக சொல்லப்படுகிறது. மேலும் பட்ஜெட்டை எதிர்த்து விட்ட அஜய் ஞானமுத்து மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தயாரிப்பாளர் தாணு அழுத்தம் கொடுப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தற்போது விடுதலை படத்தினை இயக்கி வரும் வெற்றிமாறன் படத்தின் பட்ஜெட்டை உயர்த்தி விட்டதால் அடுத்து சூர்யாவை வைத்து தனது தயாரிப்பில் வாடிவாசல் படத்தை இயக்கும்போது இதே தவறு நடக்கக்கூடாது என்பதற்காக மறைமுகமாக வெற்றிமாறனை எச்சரிக்கும் வகையில் தாணு அஜய் ஞான முத்து மீது நடவடிக்கை எடுக்க அழுத்தம் கொடுத்து வருகிறார் என கோலிவுட் வட்டாரங்களில் பேச்சுக்கள் எழுந்துள்ளன.