Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

எந்த வீட்ல தான் சண்டை இல்ல… விஜய் உடனான பிரச்சனை குறித்து மனம் திறந்த எஸ்.ஏ.சந்திரசேகர்

sa chandrasekhar about thalapathy vijay

எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் சமுத்திரக்கனி, சாக்ஷி அகர்வால், இனியா, பருத்திவீரன் சரவணன் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் நான் கடவுள் இல்லை. இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் ஆண்டனி, இயக்குனர்கள் ராஜேஷ், பொன்ராம், தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

எஸ்.ஏ.சந்திரசேகர் பேசும் போது, சில தினங்களுக்கு முன்பு ஒரு விழாவில் விஜய்க்கு பெயர் வைக்க காரணம் பற்றி சொல்லி இருந்தேன். அது இரு நாட்களில் வேற மாதிரி பேசுகிறார்கள். ஏன் இப்படி மாற்றி மாற்றி பேசுகிறார்கள் என்று தெரியவில்லை. எனக்கும் விஜய்க்கும் பிரச்சனை இருக்கிறது. எந்த வீட்டில்தான் பிரச்சனை இல்லை. எந்த வீட்டிலும் அப்பா, மகன் சண்டை போடுவது இல்லையா… சில நாட்களில் அது கட்டிப்பிடித்துக் கொள்வார்கள். அதுபோல் தான் நானும் விஜய்யும். இன்று சண்டை போட்டுக் கொள்வோம், நாளை சேருவோம் என்றார்.

விஜய் ஆண்டனியை நான் அழைத்தவுடன் இந்த விழாவில் கலந்துக் கொண்டார். சமுத்திரகனியை தமிழ்நாட்டில் அதிகம் பார்க்க முடியவில்லை. ஐதராபாத்தில் தங்கி தெலுங்கு படங்களில் அதிகம் நடித்து வருகிறார். சிறப்பான வளர்ச்சி.

பொதுவாக நடிகைகள் நடிக்கரதோடு சரி, டப்பிங் பேச வர மாட்டாங்க, புரமோஷனுக்கு வர மாட்டாங்க… ஆனா எனக்கு இந்த படத்தில் நடித்த இனியா, சாக்ஷி அகர்வால் என இரண்டு நடிகைகள், நடித்து முடித்து, டப்பிங் பேசி, பட விழாவிற்கும் வந்து இருக்கிறார்கள். ரொம்ப சந்தோஷம் என்றார்.