தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் எஸ்ஏ சந்திரசேகர். பல்வேறு படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வந்த நிலையில் தற்போது படங்களிலும் நடிக்க தொடங்கி நடித்து வருகிறார்.
வெள்ளித்திரையில் நடிக்க தொடங்கியதை தொடர்ந்து சின்னத்திரையிலும் சீரியலில் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள புதிய சீரியல் ஒன்றை நடிகை ராதிகா சரத்குமார் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த சீரியலில் தான் எஸ் ஏ சந்திரசேகர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இந்த சீரியல் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.