தமிழ் சினிமாவின் ஜாதி பிரச்சனைகளைப் பற்றி பேசிய பரியேறும் பெருமாள், காலா, ஜெய்பீம் உள்ளிட்ட திரைப்படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. இந்த வரிசையில் அடுத்ததாக ஜாதி ரீதியான பிரச்சனைகளை பேசுகிறது சாயம் திரைப்படம்.
அபி சரவணன், ஷினி, பொன்வண்ணன், இளவரசு, போஸ் வெங்கட், தென்னவன், பெஞ்சமின், சீதா, செந்தில் குமாரி என பல திரையுலக பிரபலங்கள் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் சாயம். இந்த படத்தை அந்தோணி சாமி இயக்க ஒவைட் லேம்ப் புரொடக்ஷன் நிறுவனம் சார்பாக இயக்குனரே இப்படத்தை தயாரித்துள்ளார்.
நாகா உதயன் என்பவர் படத்திற்கு இசையமைத்துள்ளார். சலீம் கிறிஸ்டோபர் என்பவர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த படத்தின் டிரைலர் வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஜாதி ரீதியான பிரச்சனைகளை பேசி திரைப்படமாக இது இருக்கும் என தெரிகிறது. உலகம் முழுவதும் இந்த திரைப்படம் வரும் பிப்ரவரி 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்த படங்களில் ஒன்றாக சாயம் இருக்கும் என இந்த படத்தின் டிரைலரை பார்த்தவர்கள் கருத்து கூறி வருகின்றனர்.