Tamilstar
Movie Reviews சினிமா செய்திகள்

சப்தம் திரைவிமர்சனம்

sabdham movie review

மூணாறு பகுதியில் உள்ள ஒரு மருத்துவ கல்லூரியில் இரண்டு மாணவர்கள் மர்மமான முறையில் இறக்கின்றனர். அனைவரும் கல்லூரியில் எதோ ஒரு மர்மம் இருக்கிறது என நம்புகின்றனர். இதனை அறிவியல் ரீதியாக கண்டுப்பிடிப்பதற்காக பேய் மற்றும் நெகெடிவ் வைப்ரேஷன்ஸ் ஆராய்ச்சியாளராக இருக்கும் ஆதியை அழைக்கின்றனர். ஆதி நெகடிவ் வைப்ரேஷன்ஸ் கண்டு பிடிக்கும் ஒரு கருவியை வைத்து கல்லூரி முழுவதும் அவரது ஆய்வை தொடங்குகிறார். அவரது ஆய்வில் சில மர்மங்களை கண்டுப்பிடிக்கிறார். லட்சுமி மேனன் அதே கல்லூரியில் பயிற்சி மருத்துவராக இருக்கிறார். கல்லூரியில் நடக்கும் அசாம்பாவிதங்கள் முன்கூட்டியே கனவில் அவருக்கு தெரிய வருகிறது. கல்லூரியில் இருக்கும் மர்மம் என்ன? ஆதி அதனை முறியடித்தாரா? கல்லூரி மாணவிகள் மரணத்திற்கு என்ன காரணம்?

ஹாரர் திரைப்படத்திற்கான ஏற்ற நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் நடிகர் ஆதி. லட்சுமி மேனன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.பேய் புகுந்துவிடும் காட்சிகளில் மிரட்டியுள்ளார். படத்தின் எதிர்ப்பார்க்காத முக்கியமான கேரக்டரில் சிம்ரன் மற்றும் லைலா நடித்து கலக்கியுள்ளனர். ரெடின் கிங்ஸ்லி, ராஜு மேனன், விவேக் பிரசன்னா, அபிநயா ஆகியோர் கொடுத்த வேலையை செய்துள்ளனர். இயக்கம் ஈரம் படத்தில் தண்ணீர் மூலமாக வித்தியாசமான ஹாரர் கதையை இயக்கிய அறிவழகன். இம்முறை சத்தம் என்ற கான்சப்டில் மக்களை திகிலிட செய்துள்ளார். இந்த வித்தியாசமான முயற்சிக்கு இயக்குனர் அறிவழகனுக்கு பாராட்டுகள். படத்தின் இரண்டாம் பாதியில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்க வேண்டும். இரண்டாம் பாதியில் இடம் பெற்ற எமோஷனல் காட்சிகள் பார்வையாளர்களிடம் எதிர்ப்பார்த்த அளவு கனெக்ட் ஆகவில்லை என்பது பலவீனம்.

எஸ். தமனின் இசை இப்படத்தின் அடுத்த நாயகன் என கூறலாம். பின்னணி இசையில் அவரது மெனக்கெடல் நன்றாக தெரிகிறது. இசையின் மூலம் நம்மை பயப்பட செய்கிறார். அருண் பத்மனாபனின் ஒளிப்பதிவு ஹாரர் திரைக்கதைக்கு ஏற்ப பயணித்துள்ளது. குறிப்பாக கல்லூரியில் இருட்டில் ஒரு லைட் வெளிச்சம் வைத்துக் கொண்டு ஒளிப்பதிவு செய்தது பாராட்டிற்க்குரியது. தயாரிப்பு 7G Films நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

sabdham movie review
sabdham movie review