Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சினிமாவைப் பற்றி பேசிய அஜித்..SAC வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

SAC About Meet With Ajith

தமிழ் சினிமாவில் இயக்குனர்கள் ஆலமரமாக வலம் வருபவர் எஸ் ஏ சந்திரசேகர். தளபதி விஜயின் தந்தையான இவர் இயக்குனராக பல முன்னணி நட்சத்திரங்களை வைத்து பல்வேறு படங்களை இயக்கியுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜயகாந்த், சத்யராஜ் என இவரது இயக்கத்தில் நடித்த நடிகர்கள் எக்கச்சக்கம். தற்போது இவர் அளித்த பேட்டி ஒன்றில் ஏழு வருடங்களுக்கு முன்னர் அஜித் வீட்டிற்குச் சென்றிருந்தபோது ஷாலினி என்னை வரவேற்று உட்கார வைத்தார். அப்போது கார்ப்பரேட் அதிகாரி போல அஜித் பக்கத்தில் வந்து அமர்ந்தார்.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சினிமாவை பற்றி பேசினோம். சினிமாவில் நாணயமானவர்கள் இல்லை என அஜித் வருத்தப்பட்டார். அவரைப் போல எல்லோரும் சினிமாவில் நாணயமானவர்களாக இருக்க வேண்டும் என அவர் ஆசைப்படுவதை நான் அன்று உணர்ந்து கொண்டேன். எனக்கும் அஜித்துக்கும் இடையே நடந்த கடைசி சந்திப்பு அதுதான்.

அதன் பிறகு நான் இன்னும் அவரை சந்திக்கவில்லை என எஸ் ஏ சந்திரசேகர் அவர்கள் கூறியுள்ளார். இவர் யூட்யூபில் புதிதாக தொடங்கியுள்ள யார் என்ற எஸ் ஏ சி என்ற சேனலில் வெளியிட்டிருந்த முதல் வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

SAC About Meet With Ajith
SAC About Meet With Ajith