தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வம்சி இயக்கத்தில் வெளியான திரைப்படம் வாரிசு. 250 கோடிக்கும் அதிகமாக வசூல் சாதனை படைத்து வரும் இந்த திரைப்படம் சீரியல் போல இருப்பதாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.
இப்படியான நிலையில் தற்போது வாரிசு திரைப்படம் சீரியல் போல இருப்பதாக விமர்சித்தவர்களுக்கு எஸ் ஏ சந்திரசேகர் பேட்டி ஒன்றில் பதிலடி கொடுத்துள்ளார். சீரியல் போன்று இருப்பதாக விமர்சிப்பவர்களுக்கு பதிலடி வாரிசு வசூல் தான் என தெரிவித்துள்ளார்.
மேலும் ஒரு குழந்தை விஜய் அண்ணா படத்தை பார்த்தே ஆகணும் என அடம் பிடித்ததாக பெண்மணி ஒருவர் என்னிடம் லைவ் வீடியோவில் கூறினார். ஒரு குழந்தை அடம்பிடிக்கிறது என்றால் அந்த படத்தை குடும்பமே பார்க்கும். எனவே இது குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி என தெரிவித்துள்ளார்.