கொரோனா தாக்கம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு துறைகள் பாதிக்கட்டு, நஷ்டமடைந்தன. அதிலும் திரைத்துறை பெரிதளவில் வீழ்ச்சியை சந்தித்தது.
மேலும் கொரோனா தாக்கம் காரணமாக 6 மாதங்களாக திரையரங்குக்கு திறக்கப்படாமல் இருக்கிறது. ஆனால் தமிழகம் கொஞ்சம் கொஞ்சமாக கொரோனாவில் இருந்து இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.
இந்நிலையில் திரையரங்ககுகள் திறக்கப்படலாம் என்றும் அதற்கான விதிமுறைகளை பின்பற்றி தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்படலாம் என தெரியவந்துள்ளது.
விதிமுறைகள் :
* ஒரு ஷோவிற்கு அதிகபட்சம் 40% சதவீதத்தில் இருந்து 50% சதவீதம் மட்டுமே படம் பார்க்க வேண்டும்.
* திரையரங்கில் நுழைவதற்கு முன்பு அவரவர்களின் வெப்ப நிலையை செக் செய்த பின் வர வேண்டும்.
* ஒரு சீட்டுக்கும் மற்றொரு சீட்டுக்கும் இடைவெளி இருக்க வேண்டும்.
* ஒரு நாளில் மொத்தம் 3 ஷாக்களுக்கு மட்டுமே அனுமதி, அதிலும் ஒரு ஷோ முடிந்த அடுத்த ஷோ வருவதற்கு 1 1/2 மணி நேரம் இடைவெளி இருக்கும்.
மேலும் வரும் அக்டோம்பர் மாதம் திரையரங்குகள் திறக்கப்படும் என்றும் அதற்கான அறிவிப்பு இந்த மாத இறுதிக்குள் வெளிவரும் என்றும் தெரிவிக்கின்றனர்.